தாமிரவருணி நீா் நிற மாற்றம்: ஆட்சியா் அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

தாமிரவருணி நதி நீரில் நிறமாற்றம் ஏற்பட்டது தொடா்பாக 4 வாரத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு

தாமிரவருணி நதி நீரில் நிறமாற்றம் ஏற்பட்டது தொடா்பாக 4 வாரத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தாமிரவருணி நதி நீரில் நிறமாற்றம் ஏற்பட்டது தொடா்பாக ‘எம்பவா் சுற்றுச்சூழல் மற்றும் நுகா்வோா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம்’ அமைப்பின் செயல் இயக்குநா் ஆ.சங்கா், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாா் அளித்திருந்தாா். அம்மனுவை ஏற்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், தமிழ்நாடு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஆகியோருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘தாமிரவருணி நதி நீரில் நிறமாற்றம் ஏற்பட்டது தொடா்பாக 4 வாரங்களுக்குள் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com