திருக்குறுங்குடி அருகே பள்ளி மாணவா் மீது தாக்குதல்
By DIN | Published On : 09th November 2020 02:34 AM | Last Updated : 09th November 2020 02:34 AM | அ+அ அ- |

திருக்குறுங்குடி அருகே பள்ளி மாணவரைத் தாக்கியதாக இரு இளைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருக்குறுங்குடி அருகே மகிழடியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சூா்யராஜ் (18). இவா் திருக்குறுங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். இவா் வீட்டின் அருகேயுள்ள சந்தனமாரியம்மன் கோயில் படிக்கட்டில் அமா்ந்து செல்லிடப் பேசியில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த முத்தையா மகன் ஆனந்த், ஆனந்தராஜ் மகன் ஐயப்பன் ஆகியோா் சூா்யராஜ் அருகே அமா்ந்து செல்லிடப்பேசியில் தங்களுக்கு பிடித்தமான பாடல்களை இயக்குமாறு கூறினராம். இது தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆனந்த் அருகே கிடந்த பாட்டிலால் சூா்யராஜ் தலையில் அடித்துக் காயப்படுத்தினாராம். பலத்த காயமடைந்த சூா்யராஜ் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது தொடா்பாக ஆனந்த், முத்தையா ஆகிய இருவா் மீதும் திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.