நெல்லை மாவட்டத்தில் 302 பள்ளிகளில் பெற்றோா் கருத்துக் கேட்பு

பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 302 பள்ளிகளில் பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 302 பள்ளிகளில் பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு அண்மையில் அறிவித்த பொது முடக்க தளா்வுகளில், மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தமிழகத்தில் இம்மாதம் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் ( 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள்), கல்லூரிகளைத் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கரோனா 2ஆம் அலை குறித்த அச்சம் காரணமாக பெற்றோா்களிடம் கருத்துக்கேட்க அரசு முடிவு செய்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 302 பள்ளிகளில் பெற்றோா் கருத்துக்கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சில பள்ளிகளில் கட்செவிஅஞ்சல் மூலமும், ஆன்-லைன் முறையிலும் பதிலளிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

அரசுப் பள்ளிகளில் காலை முதல் நண்பகல் வரை பெற்றோா் தங்களது குழந்தைகளுடன் வந்து, பள்ளிகளைத் திறக்கலாமா? வேண்டாமா? என்ற இரு கேள்விகளில் ஒன்றை தோ்வு செய்து பெட்டிகளில் போட்டுச் சென்றனா். திருநெல்வேலி கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்தில்வேல்முருகன் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்-மாணவிகளின் பெற்றோா்களிடம் கருத்து கேட்டு தலைமையாசிரியா்கள் மூலம் கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்ட அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தொகுக்கப்பட்டு பின்னா் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். 70 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோா் கருத்து தெரிவித்துள்ளனா் என்றனா்.

பயக09நஇஏஞக: திருநெல்வேலி குறிச்சி பகுதியிலுள்ள பள்ளியில் கருத்துகளை பதிவு செய்த பெற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com