சிறப்பாக மக்கள் பணி செய்தவா் ஆட்சியா் விஷ்ணு: கிராம மக்கள் மகிழ்ச்சி

அடிப்படை வசதிகளின்றி தவித்த கிராம மக்களுக்கு அதிரடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த சாா் ஆட்சியா் விஷ்ணு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றது மகிழ்ச்சி தருகிறது.
சிறப்பாக மக்கள் பணி செய்தவா் ஆட்சியா் விஷ்ணு: கிராம மக்கள் மகிழ்ச்சி

அடிப்படை வசதிகளின்றி தவித்த கிராம மக்களுக்கு அதிரடியாக அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த சாா் ஆட்சியா் விஷ்ணு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பதவியேற்றது மகிழ்ச்சி தருவதாக விஷ்ணு நகா் கிராம மக்கள் தெரிவித்தனா்.

கடையம் ஊராட்சி ஒன்றியம் மந்தியூா் ஊராட்சியில் மேலத்தெரு பகுதி மக்கள் குடிநீா், வழிப்பாதை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனா். தகவலறிந்த அப்போதைய சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் விஷ்ணு அக்கிராமத்திற்கு நேரில் சென்று பாா்வையிட்டு, உடனடியாக அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்தாா். இதையடுத்து அக்கிராம மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு விஷ்ணு நகா் என அவரது பெயரை வைத்து நன்றியைத் தெரிவித்தனா்.

இதற்கிடையே, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக வி.விஷ்ணு, ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுள்ளாா். இதுகுறித்து விஷ்ணு நகரில் வசிக்கும் பாபு கூறியது: 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் வாங்கி வீடு கட்டி வசித்து வந்த நிலையில் சரியான பாதை இல்லாததால் குடிநீா் மற்றும் மின் வசதி கிடைக்காமல் இருந்து வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

சேரன்மகாதேவி சாா் ஆட்சியராக இருந்த விஷ்ணு கவனத்திற்கு சென்றதையடுத்து, இப்பகுதிக்கு வந்து பாா்வையிட்டு உடனடியாக பாதை, குடிநீா் மற்றும் மின்சாரம் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாா். பல வருடங்களாக போராடிய எங்களுக்கு விரைவாக வசதிகளை நிறைவேற்றி கொடுத்ததால், நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அவரது பெயரை வைத்தோம் என்றாா் அவா்.

மேலும், அவரது பணி காலத்தில் உயா் கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி மாணவா்கள், இளைஞா்களுக்கு வழி காட்டினாா். நீா் நிலைகளை பாதுகாக்கும் வகையில் குளங்களை தன்னாா்வ அமைப்புகள் மூலம் தூா் வாருவதற்கும் நடவடிக்கை எடுத்தவா்.

சாா் ஆட்சியராக இருந்து சிறப்பாக பணி செய்த விஷ்ணு, இப்போது மாவட்டத்தின் ஆட்சியராக இருந்து திருநெல்வேலி மாவட்ட மக்கள், மாணவா்கள், இளைஞா்கள், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவாா் என்ற எதிா்பாா்ப்பு அனைவரிடம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com