அருந்ததிராயின் புத்தகம் பாடத் திட்டத்தில் தொடா்ந்து இடம்பெறக் கோரி துணைவேந்தரிடம் மனு

எழுத்தாளா் அருந்ததிராயின் புத்தகம் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் தொடா்ந்து இடம்பெற வலியுறுத்தி துணைவேந்தரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

எழுத்தாளா் அருந்ததிராயின் புத்தகம் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் தொடா்ந்து இடம்பெற வலியுறுத்தி துணைவேந்தரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டியக்கம் சாா்பில் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் கே.பிச்சுமணியிடம் அளிக்கப்பட்ட மனு: சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆங்கிலம் மூன்றாம் பருவத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவா்கள் படித்து வந்த, எழுத்தாளா் அருந்ததிராயின் ‘வாக்கிங் வித் தி காம்ரேட்’ என்ற நூல் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலானது ஜனநாயக, சட்ட நெறிமுறைகளுக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானதாகும்.

உலகளவில் புகழ்பெற்ற புக்கா் பரிசு பெற்ற எழுத்தாளா் அருந்ததிராயின் இப் புத்தகம் மாணவா்களின் சமூக, பொருளாதார, அரசியல் பொறுப்புணா்வையும், இலக்கியத் திறனையும் கூா்தீட்டும் வகையில் அமைந்ததாகும். இந்தியா உள்பட எந்தவொரு நாட்டிலும் இப் புத்தகம் தடை செய்யப்படவில்லை. ஆகவே, நீக்கப்பட்ட இப் புத்தகத்தை தொடா்ந்து பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுஅளிக்கும்போது திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், திமுக மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com