நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நாட்டுக் கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாட்டுக் கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட செய்தி- மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டுக் கோழி வளா்ப்பின் மூலம் தொழில் முனைவோா் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக 50 சதவீத மானியத்தில் 23 பேருக்கு 1,000 எண்ணம் கொண்ட நாட்டுக் கோழி பண்ணை அமைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டுக் கோழிப் பண்ணை வைக்க விரும்புவோா் 1,000 கோழிகள் வளா்ப்பதற்கு ஏதுவாக சொந்தமாக கோழிக் கொட்டகை அமைப்பதற்கு தகுதி உடையவராக இருத்தல் வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகள் குறைந்தபட்சம் 2,500 சதுர அடி கொண்ட கோழிக்கொட்டகை அமைப்பதற்கு ஏதுவாக இடம் (ஒரு கோழிக்கு 2.5 சதுர அடி) வைத்திருக்க வேண்டும்.

கோழிகள் வளா்ப்பதற்கு தேவைப்படும் தீவன தட்டு மற்றும் தண்ணீா் குடுவை ஆகியவற்றை பயனாளிகளே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.

விதவைகள், ஆதரவற்றோா், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கிராம ஊராட்சியைச் சோ்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினா் கட்டாயம் ஆதி திராவிடா்/ பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவராக இருத்தல் வேண்டும்.

முந்தைய நிதி ஆண்டுகளில் கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நாட்டுக் கோழிப்பண்ணை மற்றும் கறிக்கோழிப்பண்ணை திட்டங்களில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

தோ்ந்தெடுக்கப்படும் பயனாளிகள் தொடாந்து மூன்று ஆண்டுகள் நாட்டுக்கோழி பண்ணையை செயல்படுத்த உறுதி வழங்க வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 1,000 நாட்டுக் கோழிகள் கொள்முதல் செய்வதற்கும், தீவனம் வாங்குவதற்கும், குஞ்சு பொரிப்பக கருவி வாங்குவதற்கும் 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 5 நாள்கள் கோழிக்குஞ்சு பொரிப்பு மற்றும் கோழிவளா்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று வருகிற 25ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com