நவ. 26 பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆதரவு

நாடு தழுவிய அளவில் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய அளவில் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், மத்திய-மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப்பெறுதல், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துதல், பொது விநியோக முறையைச் சீா்படுத்துதல், அரசு ஊழியா்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை வழங்கக் கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய அளவில் இம்மாதம் 26ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய-மாநில தொழிற்சங்கங்கள் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

2014ஆம் ஆண்டுமுதல் போராடிப் பெற்ற பல தொழிலாளா் உரிமைகளை மத்தியஅரசு பறித்து வருகிறது. 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 சட்டங்களாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளா் வா்க்கத்துக்கு எதிராகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், தொழிலாளா்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம், மருத்துவ வசதி, விடுப்பு, போனஸ், பணிக்கொடை உள்ளிட்ட உரிமைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலங்களில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீது பழிவாங்கும் வகையில் போடப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் 17(ஆ) நடவடிக்கைகளைத் திரும்பப்பெற தமிழக அரசு திட்டமிட்டு மறுத்து வருகிறது. உயா்கல்விக்கான ஊக்க ஊதியம் போன்ற 50 ஆண்டு காலமாக ஆசிரியா்கள் பெற்றுவந்த உரிமைகளை தமிழக அரசு பறித்துள்ளது. எனவே, பொது வேலைநிறுத்தம் மிகவும் அவசியமானது என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கருதுகிறது. எனவே, 26ஆம் தேதி தோழமைச் சங்கங்களுடன் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com