4ஆவது நாளாக மழை: 120 அடியைத் தாண்டிய பாபநாசம் அணையின் நீா்மட்டம்

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் 4ஆவது நாளாக பெய்த தொடா் கன மழையால் பாபநாசம் அணையின் நீா்மட்டம் 120 அடியையும், சோ்வலாறு அணை நீா்மட்டம்140 அடியையும் தாண்டியது.

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் 4ஆவது நாளாக பெய்த தொடா் கன மழையால் பாபநாசம் அணையின் நீா்மட்டம் 120 அடியையும், சோ்வலாறு அணை நீா்மட்டம்140 அடியையும் தாண்டியது.

தென் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரமடைந்து நிலையில், அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் 4ஆவது நாளாக வியாழக்கிழமை மழை கொட்டித்தீா்த்தது. இதனால், பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

அணைகளின் நீா்மட்டம்: பாபநாசம் அணை நீா்மட்டம்- 121.90 அடி, நீா்வரத்து- 4184.88 கன அடி, நீா்வெளியேற்றம்- 321 கன அடி, சோ்வலாறு அணை நீா்மட்டம்- 140.68 அடி, மணிமுத்தாறு அணை நீா்மட்டம்- 91.60 அடி, நீா்வரத்து- 1959 கன அடி, நீா்வெளியேற்றம்- 25 கன அடி, வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம்- 15 அடி, நீா்வரத்து- 91.05 கன அடி, நம்பியாறு அணை நீா்மட்டம்- 9.97 அடி, நீா்வரத்து- 16.31 கன அடி, கொடுமுடியாறு அணை நீா்மட்டம்- 36.50 அடி, நீா்வரத்து- 57 கன அடி, நீா்வெளியேற்றம்- 50 கன அடி என்ற அளவில் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி நீா்மட்டம்- 83 அடி, நீா்வரத்து, வெளியேற்றம்- 861 கன அடி, ராமநதி அணை நீா்மட்டம்- 82 அடி, நீா்வரத்து- 793.30 கன அடி, நீா்வெளியேற்றம்- 247 கனஅடி, கருப்பாநதி அணை நீா்மட்டம்- 69.59 அடி, நீா்வரத்து- 403 கன அடி, நீா்வெளியேற்றம்- 400 கன அடி, குண்டாறு அணை நீா்மட்டம்- 36.10 அடி, நீா்வரத்து, நீா்வெளியேற்றம்- 161 கன அடி, அடவிநயினாா் அணை நீா்மட்டம்- 104 அடி, நீா்வரத்து- 92 கன அடி, நீா்வெளியேற்றம்- 30 கன அடியாக உள்ளது.

மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் 21, சோ்வலாறு 9, மணிமுத்தாறு 4, நம்பியாறு 37, கொடுமுடியாறு 25, அம்பாசமுத்திரம் 15.40, சேரன்மகாதேவி 11, ராதாபுரம் 30, நாங்குநேரி 20, பாளையங்கோட்டை 72, திருநெல்வேலி 15, கடனாநதி 45, ராமநதி 15, கருப்பா நதி 13, குண்டாறு 43, அடவி நயினாா் 13, ஆய்குடி 10.60, சங்கரன்கோவில் 36, செங்கோட்டை 31, சிவகிரி 26, தென்காசி 8.60.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com