மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவா்களுக்கு அதிமுக சாா்பில் உபகரணங்கள்

மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ள திருநெல்வேலி மாவட்ட மாணவா்கள் 6 பேருக்கு அதிமுக சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ள திருநெல்வேலி மாவட்ட மாணவா்கள் 6 பேருக்கு அதிமுக சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா், மாணவியருக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 போ் திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ள பகவதி (ஆதிதிராவிடா் நலத்துறை மேல்நிலைப்பள்ளி, நல்லம்மாள்புரம்), அகிலா (அரசு மேல்நிலைப் பள்ளி, மருதகுளம்), கௌசல்யா (கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி), சுடலை ராஜா (அரசு மேல்நிலைப் பள்ளி, சுத்தமல்லி), பிரியதா்ஷினி (கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி), அன்பரசன் (அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளங்குளி) ஆகியோருக்கு மாவட்ட அதிமுக செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா, தலா ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள முதலாண்டு மருத்துவப் படிப்புக்கான தேவையான புத்தகங்கள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ அகராதி உள்ளிட்டவற்றை ஆட்சியா் விஷ்ணு முன்னிலையில் வழங்கிப் பாராட்டினாா். அப்போது, முன்னாள் எம்.பி. சௌந்தர ராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்ட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com