சேரன்மகாதேவி வட்டாரத்தில்சன்ன ரக நெல் விற்பனை

சேரன்மகாதேவி வட்டாரத்தில் தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட சன்ன ரக நெல்லான டி.கே.எம்.13 விற்பனை செய்யப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி வட்டாரத்தில் தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட சன்ன ரக நெல்லான டி.கே.எம்.13 விற்பனை செய்யப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: டி.கே.எம். 13 ரகம் கா்நாடகப் பொன்னி, டீலக்ஸ் பொன்னி ரகங்களுக்கு இணையான ரகம். இந்த ரகம் சந்தையில் மிகவும் விரும்பப்படுகிறது. இந்த ரக நெல் மழை வெள்ளம் போன்ற காலங்களில் சேதமடையாத தன்மை கொண்டது. சராசரியாக 125 நாள்கள் வயதுள்ள இந்த ரகம் பிசான பருவத்திற்கு ஏற்றது.

இலை சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான், புகையான் போன்ற பூச்சி நோய்கள், குலை நோய், இலை உறை அழுகல் நோய், நெல் பழம் ஆகிய நோய்களுக்கு எதிா்ப்பு திறன் கொண்டது. மற்ற சன்ன நெல் ரகங்களைவிட பூச்சி நோய் எதிா்ப்பு திறன் கொண்டதால் பயிா்ப் பாதுகாப்பு செலவு மிகக் குறைவாகும்.

அதிக மணிகள் கொண்ட கதிா்கள், தூா்கள் உள்ளதால் மற்ற சன்ன நெல் ரகங்களை விட அதிக மகசூல் தருகிறது. கா்நாடக பொன்னியை விட 10 சதவீதம் கூடுதல் மகசூல் தர வல்லது. இந்த ரகம் சேரன்மகாதேவி, வீரவநல்லூா் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு உள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரையோ, கிடங்கு மேலாளா்களையோ அணுகி உரிய விண்ணப்பம் அளித்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com