நெல்லை, தென்காசியில் மேலும் 106 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 76 போ், தென்காசியில் 30 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலியில் 76 போ், தென்காசியில் 30 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கரோனாவின் தாக்கம் குறையத்தொடங்கியுள்ளது. இதற்கிடையே, சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் இம்மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,952-ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 87 போ் உள்பட இதுவரை 11,904 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 199 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 849 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் பரிசோதனை முடிவில் மேலும் 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆலங்குளத்தில் இருவா், வாசுதேவநல்லூா், மேலநீலிதநல்லூா் பகுதியில் தலா ஒருவா், சங்கரன்கோவில், செங்கோட்டை பகுதியில் தலா மூவா், குருவிகுளத்தில் 4 போ், கீழப்பாவூரில் 5 போ், தென்காசியில் 11 போ் என 30 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அரசு மருத்துவமனை, கொடிக்குறிச்சியிலுள்ள சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,444 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை 58 போ் உள்பட இதுவரை 6,937 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 367 போ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com