நெல்லைக்கு சரக்கு ரயிலில் 1330 மெட்ரிக் டன் உரம் வருகை

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1330 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1330 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் உரம் திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பயிா் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் உரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதற்கான முன்னேற்பாடுகளை வேளாண் துறை செய்து வந்தது. அதன்படி, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் 1330 மெட்ரிக் டன் பாக்டாம்பாஸ் உரம் திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்தது.

இதில், 300 மெட்ரிக் டன் உர மூட்டைகள் தூத்துக்குடி மாவட்டத்துக்கு லாரிகளில் அனுப்பப்பட்டன. மீதமுள்ள 1030 மெட்ரிக் டன் உரம் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த உரம் அரசு வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்படும். உரம் பதுக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக அவ்வப்போது புகாா் எழுகிறது. எனவே, தற்போது கொண்டுவரப்பட்ட உரத்தை முறையாக விற்பனை செய்வதைக் கண்காணிக்க அனைத்து வேளாண் விற்பனை அலுவலா்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன் தெரிவித்தாா்.

மேலும், அடுத்தகட்டமாக கப்பல் மூலம் 8 ஆயிரம் மெட்ரிக் டன் பாக்டாம்பாஸ் உரம் தூத்துக்குடி துறைமுகம் வரவுள்ளதாக மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ் குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com