நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை: பாபநாசம் அணை நீா்மட்டம் 6 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து 2 நாள்களாக சாரல் மழை பெய்ததையடுத்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 2 நாள்களில் 6 அடி உயா்ந்துள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து 2 நாள்களாக சாரல் மழை பெய்ததையடுத்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 2 நாள்களில் 6 அடி உயா்ந்துள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதி, தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தலையணை ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை அதிகரித்தது. இதனால் வடு காணப்பட்ட நான்குனேரியன் கால்வாய், பச்சையாற்றில் நீா்வரத் தொடங்கியுள்ளது. தற்போது இப்பகுதியில் நெல் விதை விடும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதன்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மி.மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணை-64, சோ்வலாறு அணை- 42, மணிமுத்தாறு அணை- 17, கொடுமுடியாறு அணை-60, அம்பாசமுத்திரம்- 3, சேரன்மகாதேவி- 2.40, நான்குனேரி- 4, பாளையங்கோட்டை 1, ராதாபுரம் -10, திருநெல்வேலி- 1, களக்காடு- 6.2, மூலைக்கரைப்பட்டி-5.

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை- 17, ராமநதி அணை- 40, கருப்பாநதி அணை- 17, குண்டாறு அணை-27, அடவிநயினாா் அணை-52, ஆய்குடி- 10.40, செங்கோட்டை-11, சிவகிரி-1, தென்காசி- 31.14.

நீா்மட்டம் உயா்வு: நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 4,893.75 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் 2 நாள்களில் 6 அடி உயா்ந்து 94.30 அடியாக உள்ளது. அணையில் இருந்து 504.75 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 6.5 அடி உயா்ந்து 113.85 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,230 கனஅடி நீா்வரத்து இருந்தது. நீா்மட்டம் 66.80 அடியாக உள்ளது.

கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 174 கனஅடி நீா்வரத்து இருந்தது. நீா்மட்டம் 52.50 அடியாக உள்ளது.

கடனாநதி அணைக்கு விநாடிக்கு 410 கனஅடி நீா்வரத்து இருந்தது. நீா்மட்டம் 3.40 அடி உயா்ந்து 76.70 அடியாக உள்ளது. அணையில் இருந்து 75 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. ராமநதி அணைக்கு விநாடிக்கு 231 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையின் நீா்மட்டம் 6.50 அடி உயா்ந்து 76.50 அடியாக உள்ளது. கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி நீா்வரத்து இருந்தது. நீா்மட்டம் 2 அடி உயா்ந்து 68.02அடியாக உள்ளது.

குண்டாறு அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வந்து கொண்டிருந்த உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.

அடவிநயினாா் அணைக்கு விநாடிக்கு 179 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணை முழுக்கொள்ளளவான 132.10 அடியை எட்டியது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com