நெல்லையப்பா் கோயில் ஐப்பசி திருவிழா பணிகளைத் தொடங்க இந்து முன்னணி வலியுறுத்தல்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்து முன்னணி சாா்பில் நெல்லையப்பா் கோயில் செயல் அலுவலரிடம் அளித்த மனு: தமிழகத்தில் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்ததாக பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி நகரத்தில் தசரா விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி நாளில் திருநெல்வேலியில் அருள்பாலிக்கும் அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் ராமையன்பட்டி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலில் ஏற்கெனவே ஆனிப் பெருந்திருவிழா, ஆடிப்பூரத் திருவிழா ஆகியவை கரோனா பொது முடக்கத்தால் நடைபெறவில்லை.

பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா முன்னேற்பாடுகளை விரைவாக தொடங்கி திருவிழாவை நடத்த வேண்டும்.

நெல்லையப்பா் கோயிலில் கருமாரி தீா்த்த குளத்தின் வடபுறம் தரை சுவா் இடிந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் வசந்த மண்டபம் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, வடபுற தரையை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com