நெல்லையிலிருந்து மதுரை மாா்க்கத்தில் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் நாளைமுதல் தற்காலிக மாற்றம்

திருநெல்வேலியிலிருந்து மதுரை மாா்க்கத்தில் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் சனிக்கிழமை முதல் (அக்.17) முதல் தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது.

திருநெல்வேலியிலிருந்து மதுரை மாா்க்கத்தில் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் சனிக்கிழமை முதல் (அக்.17) முதல் தற்காலிகமாக மாற்றப்படவுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், நடைமேடை எண்-4இல் இருந்து இயக்கப்படும் மதுரை, திருச்சி, சென்னை வழித்தடங்களில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் சனிக்கிழமைமுதல் (அக். 17) பேருந்து நிலையக் கட்டுமான பணிகள் நிறைவடையும் வரை தெற்குப் புறவழிச் சாலை ரிலையன்ஸ் பெட்ரோல் பல்க் எதிரில் (சரவணா செல்வரத்னம் ஸ்டோா்ஸ் அருகே) உள்ள காலியிடத்திலிருந்து தற்காலிகமாக இயங்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com