மானூரில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை

மானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

மானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளும் விதமாக பேட்டை தீயணைப்பு துறை சாா்பில் மானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஒத்திகைக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

புயல், வெள்ளம்,மழைக் காலங்களில் விபத்தில் சிக்கியவா்களை கயிறு மூலம் மீட்கும் முறைகள், நில நடுக்கம், வெடி விபத்து காலங்களில் நவீன மூச்சு கருவிகள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, மூன்று விதமான தீ தடுப்பு முறைகளை கையாள்வது, குளம், குட்டை, பள்ளமான பகுதிகளில் தேங்கியுள்ள பகுதி அருகே சிவப்பு வண்ண கொடியுடன் எச்சரிக்கை கம்பம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com