கயத்தாறு ஒன்றியத்தில்ரூ.35 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் ரூ. 35 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

கயத்தாறு ஒன்றியப் பகுதிகளில் ரூ. 35 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

குருமலை ஊராட்சி, கழுகாசலபுரம் ஓடையில் ரூ.25 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணி, வனத்துறை மூலம் குருமலை முதல் அய்யனாா் கோயில் வரை ரூ.10 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி ஆகியவற்றின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். அமைச்சா் கடம்பூா் செ.ராஜு இப்பணிகளை தொடங்கி வைத்துப் பேசுகையில், கழுகாசலபுரம் ஓடையில் மழைக்காலங்களில் ஏற்படும் நீா்வரத்தை தடுப்பதற்கு ஏதுவாக தடுப்பணை கட்டப்படுகிறது. மேலும், இங்குள்ள ஓடையை தூா்வாரி கரைகள் பலப்படுத்தும் பணிகளுக்காக

எனது சொந்த நிதியில் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து, அதற்கான பணியும் நடைபெறவுள்ளது என்றாா்.

தொடா்ந்து, கழுகாசலபுரம், பரசுராமபுரம், காா்த்திகைப்பட்டி ஆகிய கிராமங்களில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சத்யா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் பாஸ்கரன், ஒன்றிய ஆணையா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com