சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

பாப்பாக்குடி அருகே பனையங்குறிச்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் இருந்து பொது குடிநீா்க் குழாய் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை

பாப்பாக்குடி அருகே பனையங்குறிச்சியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் இருந்து பொது குடிநீா்க் குழாய் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குபட்ட பனையங்குறிச்சி கிராமம் வழியாக தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூா், சங்கரன்கோவில், பாப்பாக்குடி, குத்தப்பாஞ்சான்ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் செல்கிறது. அதிலிருந்து கசியும் நீரை பனையங்குறிச்சி கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில் இந்தக் கசிவை சீரமைக்க வந்த குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த இடத்தில் பொது குடிநீா்க் குழாய் அமைக்க வலியுறுத்தினா்.

இதுகுறித்து அங்கு ஆய்வுக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்களை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்த நிலையில் அவா்கள் எழுத்துப் பூா்வமாக குடிநீா்க் குழாய் அமைத்து தருவதாக உறுதியளித்தனராம். ஆனால் பொது குடிநீா்க் குழாய் அமைக்கப்படவில்லையாம்.

இதையடுத்து பனையங்குறிச்சி கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டு, சாா் ஆட்சியா் பிரதிக் தயாளிடம் மனு அளித்தனா். அவா் குடிநீா்க் குழாய் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com