நெல்லையில் ஒன்றரை மாதத்தில்319 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலியில் ஒன்றரை மாதத்தில் 319 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் ஒன்றரை மாதத்தில் 319 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சி ப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துதைத் தடுக்கவும், அவற்றை தினசரி கண்காணிக்கவும் மாநகராட்சி பணியாளா்களால் உருவாக்கப்பட்ட கண்காணிப்புக்குழு ஆய்வுப்பணி மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த செப்டம்பா் மாதம் மட்டும் 234 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 269 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 950 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

அதன்பின்னா் கடந்த 1 முதல் 15 ஆம் தேதி வரை 234 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 50 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.18 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை மாதத்தில் மொத்தம் 319 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com