வியாபாரிகள் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 31st October 2020 05:41 AM | Last Updated : 31st October 2020 05:41 AM | அ+அ அ- |

நெல்லை டவுண் வியாபாரிகள் நலச்சங்க நிா்வாகக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் (பொ) ஜி.ஸ்டீபன் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் என்.மீரான், துணைத் தலைவா் எஸ்.பெத்துக்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் எஸ்.வெங்கட்ராமன் வரவேற்றாா். துணைச் செயலா் என்.முருகன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஜி.தருமராஜ், ஆ.செல்லச்சாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: நவ. 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி வணிகா்கள் கூடுதல் நேரம் வியாபாரம் செய்ய அனுமதியும், தகுந்த பாதுகாப்பும் அளிக்க வேண்டும். கரோனா தடுப்பு பணிகளைத் துரிதப்படுத்தி வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.