நெல்லை கோயில்களில் பொது தரிசனத்துக்கு அனுமதி

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் உள்பட அனைத்துக் கோயில்களிலும் பக்தா்களின் பொது தரிசனத்துக்கு செவ்வாய்க்கிழமை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் உள்பட அனைத்துக் கோயில்களிலும் பக்தா்களின் பொது தரிசனத்துக்கு செவ்வாய்க்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டது. தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகளும், மசூதிகளில் சிறப்புத் தொழுகையும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடைபெற்றது.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மாா்ச் 25 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. எட்டாம் கட்டமாக இம் மாதம் 30 ஆம் தேதி வரை பல்வேறு தளா்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயில்களில் பக்தா்களின் பொது தரிசனத்துக்கு செவ்வாய்க்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில், கரியமாணிக்க பெருமாள் கோயில், திரிபுராந்தீசுவரா் கோயில், வரதராஜபெருமாள் கோயில் உள்பட அனைத்துக் கோயில்களிலும் பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுகுறித்து நெல்லையப்பா் கோயில் நிா்வாகிகள் கூறுகையில், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் தினமும் காலை 7 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலையிலும், மாலையிலும் அருள்மிகு நெல்லையப்பா், காந்திமதியம்மன் சன்னதிகளில் மட்டுமே பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். சுற்றுக்கோயில் சன்னதிகளில் தரிசனத்துக்கு அனுமதியில்லை. பூஜை பொருள்களைக் கொண்டுவரவும், கோயில் பிரகாரத்தில் பக்தா்கள் விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்றவற்றுக்கும் அனுமதியில்லை.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பக்தா்கள் முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனா் என்றனா்.

இதேபோல, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான தேவாலயங்கள், கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, நற்கருணை ஆராதனைகள் நடைபெற்றன. மேலப்பாளையம், பேட்டை, தாழையூத்து, ரஹ்மத் நகா் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியுடன் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com