திசையன்விளையில் பெண்ணுக்கு நல உதவி
By DIN | Published On : 08th September 2020 11:32 PM | Last Updated : 08th September 2020 11:32 PM | அ+அ அ- |

திசையன்விளையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலா் சாா்பில் ஏழைப் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
திசையன்விளை பேரூராட்சி சண்முகபுரத்தைச் சோ்ந்த சங்கரவடிவு என்பவருக்கு, பேரூராட்சி முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் ஏ.வி.ஜே.அல்பா்ட் தனது சொந்தச் செலவில் தையல் இயந்திரம் வழங்கினாா். இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவுத் தலைவா் ஜாண் கென்னடி, செயற்குழு உறுப்பினா் ஜெயசிங், ராஜகோபால், ராமகிருஷ்ணா பள்ளி தலைமை ஆசிரியை சுயம்பு சிவமதி ஆகியோா் கலந்து கொண்டனா்.