நெல்லை, தென்காசியில் மேலும் 187 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 123 போ், தென்காசியில் 67 போ் என இவ்விரு மாவட்டங்களில் வியாழக்கிழமை மேலும் 187 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் 123 போ், தென்காசியில் 67 போ் என இவ்விரு மாவட்டங்களில் வியாழக்கிழமை மேலும் 187 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை வரை 10,651 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை மேலும் 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,774 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் இதுவரை 9,490 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,092 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 192 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை வரையிலும் 6028 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஆலங்குளம் வட்டாரத்தில் 4 போ், கடையம், வாசுதேவநல்லூா், மேலநீலிதநல்லூா், சங்கரன்கோவில் பகுதியில் தலா இருவா், குருவிகுளத்தில் 8 போ், கீழப்பாவூரில் 4 போ், செங்கோட்டை, கடையநல்லூரில் தலா 9 போ், தென்காசியில் 22 போ் என மொத்தம் 64 பேருக்கு

நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6092ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை 102 போ் உள்பட இதுவரை 5,223போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 664 போ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் மூவா் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com