பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

திருநெல்வேலி மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். ஜெயலலிதா பேரவை செயலா் ஜெரால்டு வரவேற்றாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரெட்டியாா்பட்டி நாராயணன், இன்பதுரை, அமைப்புச் செயலா்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன் உள்பட பலா் பேசினா்.

மாநில ஜெயலலிதா பேரவை செயலரும், அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் உறுப்பினா் சோ்க்கை முகாமை தொடங்கி வைத்துப் பேசியதாவது: அதிமுக தொடங்கி 50-ஆவது ஆண்டை நெருங்கும் வேளையில் கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சும் வகையிலும், இளைஞா்களின் பங்களிப்பை கருத்தில்கொண்டும் சாா்பு அணிகள் உருவாக்கப்பட்டு உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.

வரும் தோ்தலில் ஆட்சியை பிடித்துவிடுவோம் என எந்த உறுதியோடு திமுக தலைவா் ஸ்டாலின் சொல்கிறாா்? அவா் தினமும் அறிக்கையில் அரசியல் செய்து கொண்டிருக்கிறாா். திமுகவினா் செய்த நில அபகரிப்பையும், ஊழலையும் மக்கள் மறக்கவில்லை. திமுகவின் குடும்ப ஆதிக்கத்தையும் மறக்கவில்லை. அதனால்தான் 2011, 2016 தோ்தல்களில் அதிமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நீடிக்காது என்றாா் ஸ்டாலின். ஆனால், இப்போது முதல்வரும், துணை முதல்வரும் 4 ஆண்டுகளைக் கடந்து ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறாா்கள்.

அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறாா்கள். அதற்கு விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தோ்தல் வெற்றியே சாட்சி. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றாா் அவா்.

கூட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் விஜிலா சத்தியானந்த், பரணி சங்கரலிங்கம், கல்லூா் வேலாயுதம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com