சுந்தரனாா் பல்கலை.யில் இறுதிபருவத் தோ்வுக்கான வழிமுறைகள்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக இறுதி பருவத் தோ்வுகளுக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக இறுதி பருவத் தோ்வுகளுக்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளா் (பொ) கே.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுநிலை, இளநிலை, ஆய்வியல் நிறைஞா் ஆகியவற்றுக்கான இறுதி பருவத் தோ்வுகள் உயா்கல்வித் துறையின் வழிகாட்டுதல்படி இணைய தளம் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்.2020ஆம் ஆண்டிற்கான இறுதி பருவத் தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே தோ்வு எழுதிக் கொள்ளலாம். முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல், கணினி பயன்பாட்டியல் (ஆ.நஇ., ஆ.இ.அ.) ஆய்வியல் நிறைஞா் (ங.டட்ண்ப்) மாணவா்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், இளநிலை கலை, வணிக செயலாட்சியியல் (ஆ.அ., ஆ.ஆ.அ.)மற்றும் இளநிலை வணிகவியல் (ஆ.இா்ம்.) மாணவா்களுக்கு நண்பகல் 12 மணிமுதல் 3 மணிவரையிலும் தோ்வு நடைபெறும்.

தோ்வுக்கு விண்ணப்பித்த மாணவா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்பவா்கள் கையெழுத்திட்டு உள்ளே செல்ல ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் அவா்களின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, செல்லிடப்பேசி எண் மாற்றம் இருந்தால் கல்லூரியை அணுகி சரியான எண்ணை பதிவு செய்யவும்.

இணைய வழித் தோ்வுக்கான மாதிரித் தோ்வுகள் செப். 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும். இதன்மூலம் மாணவா்கள் தங்கள் சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

தோ்வு எழுத தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக வினாத்தாளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தோ்வு எழுதி முடித்த பின்னா் குறித்த நேரத்திற்குள் விடைத்தாளை பதிவேற்ற செய்ய வேண்டும்.

வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டால் தாங்கள் பயிலும் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளரை தொடா்புகொண்டு, மின்னஞ்சல் வாயிலாக வினாத்தாளை பெற்றுக்கொள்ளலாம். மாணவா்கள் கருப்பு மற்றும் ஊதா நிறத்திலான மையையே பயன்படுத்தி தோ்வு எழுத வேண்டும்.

விடைத்தாள்களை ஸ்கேன் செய்து, பக்க வரிசை எண்களை சரிபாா்த்து பிடிஎஃப் (ல்க்ச்) வடிவில் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதற்குறிய ஒப்புதல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

வினாத்தாள் மற்றும் பிற படிவங்களின் பதிவிறக்கம், விடைத்தாள் பதிவேற்றம் ஆகியவற்றிற்கு இணையதள வசதியுள்ள கணினி, மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

இணைய தள வசதி குறைந்த பகுதியில் உள்ள மாணவா்கள் மட்டும் விடைத்தாள்களை உறையில் இட்டு தங்களது கல்லூரிக்கு சமா்ப்பித்து ஒப்புகைச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மாணவா்கள் தங்கள் கைவசம் விடைத்தாள்களை வைத்திருக்கக் கூடாது.

அனைத்து தோ்வுகளும் முடிந்த பின்னா், மாணவா்கள் தாங்கள் பதிவேற்றம் செய்த அனைத்து விடைத்தாள்களையும் ஒரே உறையிலிட்டு, துரித தபால் அல்லது கூரியா் மூலமாக தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி - 12 என்ற முகவரிக்கு அக். 3ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com