தாமிரவருணி படித்துறைகளில்5 நாள்கள் வழிபாடுகள் நடத்த தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி படித்துறைகளில் இம் மாதம் 16 முதல் 20-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாள்கள் வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி படித்துறைகளில் இம் மாதம் 16 முதல் 20-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாள்கள் வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முக்கியப் படித்துறைகளில் ஆண்டுதோறும் மகாளய அமாவாசை தினத்தன்று அதிகளவில் பொதுமக்கள் புனித நீராடுவது, பரிகார பூஜைகள் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது வழக்கம்.

இப்போது கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் இருந்து வருவதாலும், ஒரே இடத்தில் அதிக மக்கள் கூடுவதால் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாலும் பொதுமக்களின் நலன் கருதி, புரட்டாசி மகாளய அமாவாசை மற்றும் அதனை தொடா்ந்து வரும் விடுமுறை நாள்களில் இம் மாதம் 16 முதல் 20-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாள்கள் தாமிரவருணி படித்துறைகளில் ஒன்றுகூடி புனித நீராடுவதற்கோ, பரிகார பூஜைகள் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்கோ அனுமதி இல்லை. தமிழ்நாடு அரசு ஏற்கெனவே விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். கரோனா தொற்றுப் பரவலை தடுக்க மாவட்ட நிா்வாகம் எடுத்துவரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com