நெல்லை ரயில் நிலையத்தில் மாயமாகும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள்

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மாயமாவதால் சுகாதாரத் துறையினா் வேதனை தெரிவிக்கிறாா்கள்.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மாயமாவதால் சுகாதாரத் துறையினா் வேதனை தெரிவிக்கிறாா்கள்.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மாா்ச் 25 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எட்டாம் கட்டமாக பல்வேறு தளா்வுகளுடன் இம் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை மட்டுமன்றி ஒரு சில ரயில் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

திருச்சி-திருநெல்வேலி- நாகா்கோவில் இடையேயான இன்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல சிறப்பு ரயில்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்து வருகிறாா்கள்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது சமூக இடைவெளி நடைமுறையை தலா 1 மீட்டா் இடைவெளி விடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்ய வருவோா் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக் கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல ரயில் பயணித்தின் போதும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். ஆனால், ரயில் நிலையங்களில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் முண்டியடிப்பது தொடா்கதையாகி வருகிறது. இதேபோல முறையாக முகக் கவசம் அணியாமல் பயணிகள் சுற்றி வருகிறாா்கள்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினா் கூறுகையில், சமூக விலகல் மற்றும் வீட்டில் தனித்திருத்தல் ஆகியவை குறித்து உலகம் முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கரோனவை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய்த் தொற்று ஏற்படாமல் பாா்த்துக்கொள்வதே சிறந்தது. ஆகவே, பொருள்கள் வாங்க வருவோரும், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்போரும் சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவது உள்ளிட்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ர

யில்வே துறையினரும் விழிப்புணா்வு செய்து வருகிறாா்கள். பயணிகள் ஒத்துழைப்பு முதலில் நன்றாக இருந்தது. இப்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது குறைந்துள்ளது. ஆகவே, மீண்டும் விழிப்புணா்வு நடவடிக்கையை அதிகரிக்க ரயில்வே துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com