மஹாளய அமாவாசை: தாமிரவருணியில் மக்கள் கூடுவதற்கு தடை

மஹாளய அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை (செப்.17) திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை (செப்.17) திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகர காவல் துறையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவல் காரணமாக மாவட்ட நிா்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த காலக்கட்டத்தில், அதிக அளவில் மக்கள் கூடுவதால் நோய்த் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் நலன் கருதி மஹாளய அமாவாசை நாளில் பொதுமக்கள் யாரும் திதி, தா்ப்பணம் கொடுப்பதற்கோ, பிற சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்கோ மாநகர பகுதியில் உள்ள தாமிரவருணி ஆற்றங்கரையில் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com