‘இயற்கை முறையில் காய்கனி சாகுபடி: ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 19th September 2020 05:28 AM | Last Updated : 19th September 2020 05:28 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, செப். 18: இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகள் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி தோட்டக்கலை துணை இயக்குநா் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம் மாவட்டத்தில் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
காய்கனி பயிா்களுக்கு அங்கக முறையில் சாகுபடி செய்ய பதிவுக் கட்டணமாக சிறு மற்றும் குறு விவசாயிகள் எனில் ரூ.2 ஆயிரத்து 700-ம், இதர விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 200-ம், குழு மூலம் பதிவு செய்யும் குழு விவசாயிகளுக்கு ஒரு குழுவுக்கு ரூ.7 ஆயிரத்து 200-ம் உதவி இயக்குநா், விதைச்சான்று மற்றும் அங்கக சான்று, திருநெல்வேலி அலுவலகத்தில் செலுத்தி பதிவு செய்யவேண்டும்.
பதிவு செய்த விவசாயிகள் இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கீரை பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2,500-ம், தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற பயிா்களுக்கு ரூ.3,750-ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ய்ங்ற்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாரங்களைச் சோ்ந்த தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.