கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் கீழ் உள்ள கல்வி விடுதிகளில் காலியாக உள்ள

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் கீழ் உள்ள கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் கீழ் உள்ள கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் ஆண்கள்-3, பெண்கள்-3 காலிப் பணியிடங்கள் நோ்காணல் மூலம், இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தகுதிகள்: தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 1-7-2020-ஆம் தேதியில் எஸ்.சி., எஸ்.டி.-18 முதல் 35 வரை, பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி.- 18 முதல் 32 வயது வரை, இதர பிரிவினா் 18 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளா்வுகள் அளிக்கப்படும்.

பணியாற்ற விரும்புபவா்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்று அதனை பூா்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல் இணைத்து, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் அக். 1-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

காலதாமதமாக சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்பப் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

2015-16 ஆம் ஆண்டு முதல் 2018-19 ஆம் ஆண்டு வரை சமையலா் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமன முறைக்காக நாளிதழ்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது எனவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com