ராமநதி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை

தென்காசி மாவட்டம், கடையம் ராமநதி அணைக்குச் செல்ல பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல பொதுப்பணித் துறை தடை விதித்துள்ளது.

தென்காசி மாவட்டம், கடையம் ராமநதி அணைக்குச் செல்ல பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல பொதுப்பணித் துறை தடை விதித்துள்ளது.

கடையம் அருகேயுள்ள ராமநதி அணைக்கு பல்வேறு பகுதியில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்காக வருகை தருகின்றனா். கோடை காலம், விடுமுறை நாள்களிலும் ராமநதி அணைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். அணையில் குளிப்பதோடு, சமையல் செய்து உண்டு மகிழ்வா்.

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோா் அணைப் பகுதியில் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதாலும், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்ல பொதுப்பணித்துறையினா் தடை விதித்துள்ளனா். அணையின் நுழைவாயிலில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com