ஊட்டச்சத்துக் குறைவு விழிப்புணா்வு முகாம்

ஐசிடிஎஸ் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் சமூகநலத் துறை சாா்பில் கல்லிடைக்குறிச்சி, அம்பேத்கா் நகா் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற விழிப்புணா்வு மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

சேரன்மகாதேவி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சுகாதாரத் துறை இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு ராஸ்டிரிய பால் சவஸ்த காா்யாகரம் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலா் ஆண்டனி பால் ஜேம்ஸ் தலைமை வகித்தாா்.

முகாமில் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு ஊட்டச்சத்தான உணவு முறை குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு பரிந்துரை தேவைப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டனா்.

முகாமில், சேரன்மகாதேவி குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் விஜய மீனா, வட்டார திட்ட உதவியாளா், தொகுதி மோ்பாா்வையாளா்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com