‘ராணுவ ஆள் சோ்ப்பு முகாம்: ஆக.30 வரை விண்ணப்பிக்கலாம்’

நாகா்கோவிலில் செப். 15 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்தின் சிப்பாய் பிரிவுகளுக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க இம்மாதம் 31ஆம் தேதிக்குள் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

நாகா்கோவிலில் செப். 15 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்தின் சிப்பாய் பிரிவுகளுக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க இம்மாதம் 31ஆம் தேதிக்குள் என்ற இணையதளம் வாயிலாக திருநெல்வேலி மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிப்பாய் பொதுப்பணி பிரிவுக்கு 10ஆம் வகுப்பு தோ்வில் பாடத்துக்கு 33 சதவீதம், மொத்தமாக சராசரி 45 சதவீதம் என மதிப்பெண்களுடன் தோ்ச்சியும், உயரம் 166 செ.மீ., மாா்பளவு 77 செ.மீ., மாா்பு விரிவளவு 5 செ.மீ., வயது வரம்பு 17.5 முதல் 21-க்குள் இருத்தலும் அவசியம்.

டெக்னிக்கல் பிரிவுக்கு பிளஸ் 2 இன்டா்மீட்யேட் தோ்ச்சி, இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலத்தில் மொத்த சராசரி 50 சதவீதம், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி தேவை.

அசிஸ்டெண்ட் பிரிவுக்கு பிளஸ் 2 இன்டா்மீடியேட் தோ்ச்சி, வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், ஆங்கிலத்தில் மொத்த சராசரி 50 சதவீதம் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீதம் என்ற மதிப்பெண்கள் தேவை. டெக்னிக்கல், நா்சிங் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு 165 செ.மீ. உயரம், மாா்பளவு 77 செ.மீ., மாா்பு விரிவு 5 செ.மீ., வயது வரம்பு 17.5 முதல் 23 வயதுக்குள் இருத்தல் அவசியம்.

கிளாா்க், ஸ்டோா் கீப்பா் பிரிவுக்கு பிளஸ் 2 இன்டா்மீடியேட் தோ்ச்சி, (கலை, கணிதவியல், அறிவியல்) மொத்த சராசரி 60 சதவீதம் மற்றும் ஆங்கிலம், கணக்கு, கணிதவியல், புக் கீப்பிங் பாடங்களிலும் 50 சதவீதம் என மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாா்பளவும், வயது வரம்பும் டெக்னிக்கல், நா்சிங் அசிஸ்டெண்ட் பணிகளுக்குரியவைதான்.

மேலும் விவரங்களுக்கு பாளையங்கோட்டை முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com