நெல்லை நகரத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளி கிராம உதவியாளா்களை கௌரவிக்கும் விழா திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் மாற்றுத் திறனாளி கிராம உதவியாளா்களை கௌரவிக்கும் விழா திருநெல்வேலி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்க மாநில கௌரவத் தலைவா் விஜயசாரதி தலைமை வகித்தாா். அனைத்து அரசு பணி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் இப்ராஹிம் மூசா முன்னிலை வகித்தாா். தருவை மணி சிறப்புரையாற்றினாா். மாநில பொருளாளா் வள்ளிநாயகம் நன்றி கூறினாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பயணப்படியை ரூ.2500 இல் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயா்த்த வேண்டும்; 2 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரிய கூடிய அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com