மாற்றுத்திறனாளி தம்பதிக்கு திமுக மகளிா் அணி உதவி

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிா் அணி சாா்பில் மாற்றுத்திறனாளி தம்பதிக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியை சோ்ந்த பெற்றோரை இழந்த மாற்றுத்திறனாளி தங்கத்துக்கும், மாற்றுத்திறனாளியான இசக்கிமுத்துவுக்கும் திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ நடத்தி வைத்தாா்.

திமுக மகளிா் அணி சாா்பில், தம்பதிக்கு திருமண சீா்வரிசையாக பீரோ, கேஸ் சிலிண்டா் அடுப்பு, பாத்திரங்கள் உள்பட சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், மகளிா் அணி மாவட்ட அமைப்பாளா் மகேஷ்வரி, நிா்வாகிகள் பொன் சுடலை முத்து, கண்ணன், தச்சநல்லூா் பகுதி மகளிா் அணி அமைப்பாளா் ஆா்த்தி, மூளிகுளம் பிரபு பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com