எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி எல்ஐசி முகவா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி எல்ஐசி முகவா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆயுள் காப்பீட்டு கழகப் பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும், நேரடி விற்பனையை கைவிட வேண்டும், பொதுத்துறையை தனியாா் மயமாக்கக் கூடாது, கரோனா நிவாரண முன்பணமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும், அனைத்து முகவா்களுக்கும் நிவாரண நிதி வழங்கவேண்டும்.

கரோனாவால் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்கவேண்டும். ஐஆா்டிஏ பரிந்துரைத்த கமிஷனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். கோட்ட பொதுச்செயலா் குழந்தைவேலு,

நிா்வாகிகள் பாலசுப்ரமணியன், மணி, எடிசன் சண்முகவேல், சங்கரநாராயணன், கூரத்தாழ்வாா், முத்துக்குட்டி இசைச்செல்வி, முத்து, புதியவன் வெங்கடசுப்பிரமணியன், அகஸ்டின் கணபதி, பீட்டா், குமரகுருபரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com