கொத்தடிமை தொழிலாளா்கள்:புகாா் தெரிவிக்க எண் அறிமுகம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து புகாா் தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து புகாா் தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலா் உத்தரவின்படியும், தொழிலாளா் ஆணையா் அறிவுறுத்தலின்பேரிலும் தமிழகம் முழுவதும் கொத்தடிமைத் தொழிலாளா்களாக பணி செய்பவா்கள் குறித்து புகாா் தெரிவிக்க 18004252650 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் பிரச்னைகள் இருந்தால் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com