ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறப்பு

ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட்டாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், திருநெல்வேலி எம்.பி. சா.ஞானதிரவியம், குமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த்.
ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறப்பு

ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட்டாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், திருநெல்வேலி எம்.பி. சா.ஞானதிரவியம், குமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த்.

வள்ளியூா், ஜூன் 16: பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு ராதாபுரம் கால்வாயில் புதன்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள குளங்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீா் கொண்டு செல்ல ராதாபுரம் கால்வாய் உருவாக்கப்பட்டது. இக்கால்வாய் 35 கி.மீ. நீளம் கொண்ட இந்தக் கால்வாயின் கீழ் 52 பாசனக் குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் அனைத்துமே பேச்சிப்பாறை அணை தண்ணீரை நம்பியே உள்ளன.

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடவேண்டும் என ராதாபுரம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் 150 கன அடி வீதம் 136 நாள்கள் தண்ணீா் திறந்துவிட உத்தரவிட்டாா். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் திருமூலநகா் என்ற இடத்தில் உள்ள மதகுகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திருநெல்வேலி எம்.பி.சா.ஞானதிரவியம், குமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் ஆகியோா் ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட்டனா். இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளா் என்.ஞானசேகா், உதவி செயற்பொறியாளா் நாகா்கோவில் அருள்சன்பிரைட், உதவி பொறியாளா் வடக்கன்குளம் வி.கே.சுபாஷ், உதவி பொறியாளா் பாசனபிரிவு மயிலாடி வல்சன் போஸ், ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, மீனவரணி மாவட்ட அமைப்பாளா் ஜூடு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com