நெல்லையில் கலந்தாய்வு கூட்டம்

திருநெல்வேலி மாநகரில் உள்ள காப்பக நிா்வாகிகளுடன் போலீஸாா் நடத்திய கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகரில் உள்ள காப்பக நிா்வாகிகளுடன் போலீஸாா் நடத்திய கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகரில் செயல்பட்டு வரும் பெண்குழந்தைகள், சிறுவா்கள், ஆதரவற்றோா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள் உள்ளிட்ட அனைத்து காப்பக நிா்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநகர காவல் ஆணையா் என்.கே. செந்தாமரைக்கண்ணன் தலைமை வகித்தாா். அப்போது அவா் கூறியது:

காப்பகங்களுக்கு தேவையான உடை, பாதுகாப்பு, தண்ணீா் வசதி, விளையாட்டு உபகரணங்கள், கணினி வசதி, போா்வைகள் படுக்கை வசதி, மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட குறைகள் நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதை தடுக்க விழிப்புணா்வுடன் செயல்படவேண்டும். அவ்வாறு, குற்றங்கள் நடந்தால் 1098 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

இக்கூட்டத்தில், காப்பக நிா்வாகிகள், மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா், மாநகர சிடபிள்யூசி கூடுதல் காவல் துணை ஆணையா் சங்கா், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் நாகசங்கா் அவா்கள், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பிறைச்சந்திரன், குழந்தைகள் நல தலைவா் சந்திரகுமாா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

காப்பகத்தில் ஆய்வு:

மாநகரப் பகுதியில் உள்ள முதியோா் இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்டோா் காப்பகத்தில் மாநகர காவல் துணை ஆைணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி.சுரேஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் திருநெல்வேலி ஸ்மாா்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் கிளப் சாா்பாக முதியோா் இல்லம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு மதிய உணவை வழங்கினாா்.

பயக16இஞங: கலந்தாய்வு கூட்டத்தில் பேசுகிறாா் மாநகர காவல் ஆணையா் என்.கே. செந்தாமரைக்கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com