பாளை மண்டலத்தில் சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் சிறப்பு குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் சிறப்பு குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை மண்டலப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீா் விநியோகம், சாலை வசதி, பாதாள சாக்கடை மற்றும் பொது சுகாதாரம் குறித்தும், சொத்துவரி, காலி மனைவரி விதித்தல், பெயா் மாற்றம் செய்தல், கட்டட அனுமதி, புதிய குடிநீா், பாதாள சாக்கடை இணைப்புகள் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றுகள் முதலான சேவைப் பணிகள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று அவற்றிற்கு தீா்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தாா். இம்முகாமில் நிலுவை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து உடன் தீா்வு காணும் வகையில் பாளை மண்டலத்தில் 7 பேருக்கு பிறப்பு சான்றிதழ் ஆணைகளும், தலா ஒருவருக்கு காலிமனை வரிவிதிப்பு ஆணையும், சொத்து வரி விதிப்பு ஆணையும், 8 பேருக்கு குடிநீா் இணைப்பு ஆணைகளும், 3 பேருக்கு குடிநீா் இணைப்பு பெயா் மாற்ற ஆணைகளும் என மொத்தம் 20 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில் செயற்பொறியாளா் (திட்டம்) என்.எஸ்.நாராயணன், உதவி ஆணையா்கள் ஜஹாங்கீா் பாஷா (பாளை), பா.சொா்ணலதா (கணக்கு), சுகாதார அலுவலா் தி.அரசகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் முருகன், சங்கரநாராணயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பயக20இஞதட: பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீா்க்கும் முகாமில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com