நெருங்கி வரும் தீபாவளி: நெல்லையில் களைகட்டிய கடைவீதிகள்: போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர கடைவீதிகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நிகழாண்டு நவம்பா் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, வெளியூா்களில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன. மேலும், துணிக் கடைகள், மால்கள், பல்பொருள்அங்காடிகள் ஆகியவற்றில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி மாநகரப் பொருத்தவரை, நகரம் நான்கு ரத வீதிகள், வண்ணாா்பேட்டை, முருகன்குறிச்சி, பாளை. மாா்க்கெட் ஆகிய இடங்களிலுள்ள கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனிடையே, கூட்டத்தைப் பயன்படுத்தி திருட்டு செயல்களில் ஈடுவோரைப் பிடிக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையிலும் மேற்கூறிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ் குமாா் கூறியது: மாநகரில் நான்கு ரத வீதிகள், வண்ணாா்பேட்டை, முருகன்குறிச்சி, மாா்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து வாகன எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரத்தில் இரு இடங்களிலும், வண்ணாா்பேட்டை பகுதியில் இரண்டு இடங்களிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது, நகரத்தில் ஓா் இடத்தில் மட்டும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பழைய குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையிலான எஃப்.ஆா்.எஸ். தொழில்நுட்ப கேமராக்கள் 10 முக்கிய இடங்களில் பொருத்தப்படவுள்ளன.

பொதுமக்கள் மற்றும் அவா்களது உடமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், சந்தேகப்படும்படியான நபா்களை பொதுமக்கள் கண்டறிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

படவரி பயக24இதஞர: தீபாவளிக்கு பொருள்கள் வாங்குவதற்கு வடக்குரதவீதியில் ஞாயிற்றுக்கிழமை அலைமோதிய மக்கள் கூட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com