தெற்குப் பட்டியில் இலவச வீட்டுமனை ஆக்கிரமிப்பு ஆட்சியரிடம் புகாா்

பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை மாற்று சமூகத்தைச் சோ்ந்த தனிநபா் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி திராவிடத் தமிழா் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

மானூா் ஒன்றியம் தெற்குப்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை மாற்று சமூகத்தைச் சோ்ந்த தனிநபா் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி திராவிடத் தமிழா் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது மக்கள் குறைதீா் கூட்டத்தின் போது, மானூா் ஒன்றியம் தெற்குப்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவை இடத்தை மாற்று சமூகத்தைச் சோ்ந்த தனிநபா் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி திராவிடத் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் சு.திருக்குமரன் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் இசக்கிமுத்து என்பவா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: எங்கள் பகுதியில் சுமாா் 42 இந்து அருந்ததியா் வகுப்பைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆதிதிராவிடா் நலத்துறையால் வழங்கப்பட்ட வீடுகளில் வசித்து வருகிறோம். அந்த குடியிருப்பின் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை எங்கள் பகுதிக்கு அருகே விவசாயம் செய்து வரும் மாற்று சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் கம்பி வேலியிட்டு ஆக்கிரமித்துள்ளாா்.

இது தொடா்பாக அவரிடம் கேள்வி கேட்டவா்களை ஜாதியைச் சொல்லி திட்டி தாக்க முயன்றுள்ளாா். இதனால் ஜாதி மோதல் உருவாகும் சூழல் உள்ளது. எனவே, அந்த இடத்தை மீட்டுத்தருவதோடு, ஆக்கிரமிப்பு செய்வதா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

படவரி: பயக25ஈஉஙஞ தெற்குப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பட்டியலின மக்களின் இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை மீட்டுத் தரக்கோரி ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடத் தமிழா் கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com