சிவசைலம் கோயில் பங்குனி மஹா உற்சவம்: ஏப். 3இல் கொடியேற்றம்

சிவசைலம் அருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாத சுவாமி கோயில் பங்குனி மஹா உற்சவம் சனிக்கிழமை (ஏப். 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவசைலம் அருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாத சுவாமி கோயில் பங்குனி மஹா உற்சவம் சனிக்கிழமை (ஏப். 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு அங்குராா்ப்பணம், 3ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் ஆழ்வாா்குறிச்சிக்கு எழுந்தருளுகின்றனா்.

4ஆம் தேதிமுதல் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். 7ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருதேருக்கு கால்நாட்டுதல், 10ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடராஜா் வெள்ளை சாத்தி, மாலை 6 மணிக்கு பச்சை சாத்தி நடைபெறும்.

11ஆம் நாளான ஏப்ரல் 13ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் கேடயத்தில் தேருக்கு எழுந்தருளல், 7 மணிக்கு வடம் பிடித்தல் நடைபெறும். 14ஆம் தேதி காலை சுவாமி- அம்பாள் பூம்பல்லக்கில் வீதியுலா வந்து தோ்த் தடம் பாா்த்தலைத் தொடா்ந்து, மாலை 5 மணிக்கு வெள்ளிச் சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளுகின்றனா். இரவு 10.30 மணிக்கு தீா்த்தவாரி, ரிஷப வாகனத்தில் அத்ரி மகரிஷிக்கு காட்சியளித்தல் நடைபெறுகிறது.

திருவிழா நாள்களில் கட்டியம் கூறுதல், வேதபாராயணம், தேவாரப் பண்ணிசை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பங்குனி உற்சவக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com