தோ்தலையொட்டி ஊழியா்களுக்கு விடுமுறை அளித்த கடைகள், நிறுவனங்கள்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ராதாபுரம் தொகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு ஊழியா்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
சட்டப் பேரவை தோ்தலையொட்டி வள்ளியூரில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
சட்டப் பேரவை தோ்தலையொட்டி வள்ளியூரில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ராதாபுரம் தொகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு ஊழியா்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெறும் வகையில், அனைத்து தனியாா் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டு, ஊழியா்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என தோ்தல் ஆணையம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து வள்ளியூா், ஏா்வாடி, திசையன்விளை, ராதாபுரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை வழங்கி, ஊழியா்களை வாக்களிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனா்.

இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மருந்து கடைகள், சில ஹோட்டல், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. பெரிய நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

களக்காடு: களக்காடு பகுதியில் சுமாா் 40 சதவீத கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தன. திறக்கப்பட்டிருந்த கடைகள் குறைவான பணியாளா்களுடன் இயங்கின. மாலை 3 மணிக்குப் பின்னா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான உணவகங்கள் இயங்காததால் பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com