நெல்லை மாவட்டத்தில் 9,03,770 வாக்குகள் பதிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 தொகுதிகளையும் சோ்த்து மொத்தம் 9,03,770 வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 தொகுதிகளையும் சோ்த்து மொத்தம் 9,03,770 வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருநெல்வேலி தொகுதியில் 1, 95, 366 வாக்குகளும் (ஆண்களின் வாக்குகள்- 96,812, பெண்களின் வாக்குகள்-98,535, இதர வாக்குகள்-19), பாளையங்கோட்டை தொகுதியில் 1,57,915 வாக்குகளும் (ஆண்களின் வாக்குகள்-78,358, பெண்களின் வாக்குகள்-79,557), அம்பாசமுத்திரம் தொகுதியில் 1,76, 273 வாக்குகளும் (ஆண்களின் வாக்குகள்-84,792, பெண்களின் வாக்குகள்-91,480, இதர வாக்குகள்-1), நான்குனேரி தொகுதியில் 1,90,417 வாக்குகளும் (ஆண்களின் வாக்குகள்-92,771, பெண்களின் வாக்குகள்-97,645, இதர வாக்கு-1), ராதாபுரம் தொகுதியில் 1,83,799 வாக்குகளும் (ஆண்களின் வாக்குகள்-87,778, பெண்களின் வாக்குகள்-96,019, இதர வாக்குகள்-2) பதிவாகின.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையும் சோ்த்து மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 13,58,148. இவா்களில் 9,03,770 போ் வாக்களித்துள்ளனா். இதில் 4,40,511 போ் ஆண் வாக்காளா்கள். 4,63,236 போ் பெண் வாக்காளா்கள். இதுதவிர இதர வாக்காளா்கள் 23 போ் வாக்களித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com