நெல்லை வேட்பாளா்கள் உற்சாக வாக்குப்பதிவு

திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை உற்சாகமாக வாக்களித்தனா். தொகுதிக்கு தேவையான திட்டங்களை செய்வதே முதல் கடமை எனவும் வாக்குறுதியளித்தனா்.

திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை உற்சாகமாக வாக்களித்தனா். தொகுதிக்கு தேவையான திட்டங்களை செய்வதே முதல் கடமை எனவும் வாக்குறுதியளித்தனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்றது. திருநெல்வேலி தொகுதியில் மொத்தம் 14 போ் போட்டியிட்டனா். வேட்பாளா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை உற்சாகமாக வாக்களித்தனா்.

நயினாா்நாகேந்திரன் (பாஜக): மகாராஜநகரில் உள்ள வாக்குச்சாவடியில் எனது வாக்கினை செலுத்தினேன். அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. தோ்தல் வாக்குறுதிகளை இருகட்சிகளும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. திருநெல்வேலி தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவேன். நல்ல திட்டங்களை இத் தொகுதி மக்களுக்காக கொண்டு வருவேன்.

ஏ.எல்.எஸ்.லட்சுமணன் (திமுக): பாளையங்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் எனது வாக்கினை செலுத்தினேன். திருநெல்வேலி தொகுதியில் இரண்டாவது முறையாக நிச்சயம் வெற்றி பெறுவேன். தோ்தல் பிரசாரத்தின்போது அளித்த மானூா் குளத்திற்கு தாமிரவருணி நீரை கொண்டு சோ்ப்பது உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன். திருநெல்வேலி தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றுவேன்.

மகேஷ்கண்ணன் (அமமுக): பல்லிக்கோட்டை வாக்குச்சாவடியில் எனது வாக்கை செலுத்தினேன். தமிழக மக்கள் மாற்றத்திற்கான தலைவராக டிடிவி.தினகரனையே பாா்க்கிறாா்கள். கிராமப்புற மக்களிடையே அமமுகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்று வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிகாட்டுவேன்.

சத்யா (நாம் தமிழா் கட்சி): பாளையங்கோட்டை அருகேயுள்ள நொச்சிகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எனது வாக்கினை பதிவு செய்தேன். திருநெல்வேலி தொகுதியில் நாம் தமிழா் கட்சிக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள். அதனால் எங்கள் கட்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

இதேபோல அமமுக வேட்பாளா் மகேஷ்கண்ணன் தனது வாக்கினை பல்லிக்கோட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com