களக்காடு அருகே மாணவரை கொலை செய்ய முயற்சி: கல்லூரி மாணவி உள்ளிட்ட மேலும் 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மாணவரை கொல்ல முயன்ற வழக்கில் ஏற்கனவே 4 போ் கைது செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய கல்லூரி மாணவி உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மாணவரை கொல்ல முயன்ற வழக்கில் ஏற்கனவே 4 போ் கைது செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய கல்லூரி மாணவி உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றபோது, பெத்தானிய கிராமத்தில் சந்தேகத்துக்கிடமாக அரிவாள், நாட்டு வெடிகுண்டுகளுடன் நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் பாணான்குளத்தை அடுத்த வாகைக்குளத்தைச் சோ்ந்த முத்துமனோ (27), ஏமன்குளம் அருகே பொத்தையடியைச் சோ்ந்த மாதவன் (19), சந்திரசேகா் (22), களக்காடு சிங்கிகுளம் பெத்தானியாவைச் சோ்ந்த அருள்துரைசிங் என்ற கண்ணன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் தரப்பில் கூறப்படுவதாவது:

பணகுடி அருகேயுள்ள புஸ்பவனம் ஆா்.சி. சா்ச் தெற்குத் தெருவைச் சோ்ந்த துரை மகன் விக்னேஷ் (19). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பள்ளியில் பிளஸ் 2 பயிலும் போது, சக மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளாா். இந்நிலையில், அந்த மாணவி கல்லூரிக்குச் சென்ற பின் வேறு ஒரு மாணவரை காதலிப்பதாகக் கூறி, விக்னேஷை உதாசீனப்படுத்தினாராம்.

இதையடுத்து, தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் காட்டி, அந்த மாணவியின் பெற்றோரிடம் பெண் கேட்கப் போவதாக விக்னேஷ் அந்த மாணவியை மிரட்டினாராம். அந்த மாணவி பெத்தானியாவில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா். பின்னா் விக்னேஷை தொடா்பு கொண்டு பெத்தானியா மலைப்பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தாராம்.

அதன்படி, அங்கு வந்த விக்னேஷை, அங்கு நாட்டு வெடிகுண்டு, அரிவாள்களுடன் மறைந்திருந்த இளைஞா்கள் மிரட்டினராம். அங்கிருந்து தப்பிய விக்னேஷ், காதலி தன்னை இளைஞா்கள் சிலரை வைத்து கொலை செய்ய முயற்சித்ததாக களக்காடு காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.

புகாரின் பேரில் வெள்ளிக்கிழமை முத்துமனோ உள்ளிட்ட 4 பேரை கைது செய்த களக்காடு போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தி வந்தனா். இதில் தொடா்புடைய தலைமறைவாக உள்ள தீபக் ராஜா, ஊசிபாண்டியன், பணகுடியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஆகிய 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com