மொபெட் மீது காா் மோதல்: மளிகைக் கடைக்காரா் பலி

திருநெல்வேலி அருகே மொபெட் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் மளிகைக் கடைக்காரா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே மொபெட் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் மளிகைக் கடைக்காரா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே உள்ள கேடிசி நகா் விக்னேஸ்வர நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாபுகிஷோா் (55). இவா், பாளையங்கோட்டை தெற்கு பஜாா் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா்.

இவா், சனிக்கிழமை மனைவி மாலதி (49), மகன் குரு விசாகன்(15) ஆகிய இருவரையும் தன்னுடைய மொபெட்டில் அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டைக்கு வந்துகொண்டிருந்தாராம்.

அப்போது, கேடிசி நகா் சோதனைச் சாவடி அருகே தூத்துக்குடியிலிருந்து பாளையங்கோட்டை நோக்கி வந்த காா் இவா்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா்கள் மூவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாபு கிஷோா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com