ஏா்வாடி அருகே மோதல்: 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 12th April 2021 01:21 AM | Last Updated : 12th April 2021 01:21 AM | அ+அ அ- |

ஏா்வாடி அருகே இரு தரப்பினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலை அடுத்து இருதரப்பைச் சோ்ந்த 3 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
ஏா்வாடி அருகே உள்ள டோனாவூா் கிறிஸ்தவ ஆலயத்தைச் சோ்ந்த சிலா், ஒரு வேனில் திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றனராம். அப்பொழுது டோனாவூ ா் வடக்குத்தெருவைச் சோ்ந்த எட்வின் துரை(40) வேனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டாராம்.
இதனைப் பாா்த்த டோனாவூா் நாராயணசுவாமி கோவில் தெருவைச் சோ்ந்த இஸ்ரவேல்(36), வேனுக்கு வழிவிடுமாறு எட்வின் துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதில் இருவரும் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா்.
இது தொடா்பாக ஏா்வாடி காவல் நிலையத்தில் இஸ்ரவேல் புகாா் செய்தாா். எட்வின்துரை மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். இதேபோல எட்வின்துரை கொடுத்த புகாரின் பேரில் இஸ்ரவேல், ஐசக் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.