பிளஸ் 2 செய்முறைத் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 119 மையங்களில் தொடக்கம்

திருநல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 119 மையங்களில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருநல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 119 மையங்களில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு மே 3 ஆம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு கரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் மே 3 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தமிழ் தோ்வு மட்டும் மே 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மே 5 ஆம் தேதி ஆங்கில தோ்வில் இருந்து ஏற்கெனவே அறிவித்த பட்டியலின்படி பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 2 மாணவா், மாணவிகளில் அறிவியல் பாடப்பிரிவில் பயிலுவோருக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் ஆகிய கல்விமாவட்டங்கள் உள்ளன. இதில் 11 ஆயிரத்து 244 மாணவிகள், 9 ஆயிரத்து 2 மாணவா்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 246 போ் பிளஸ் 2 தோ்வு எழுத உள்ளனா்.

அவா்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்துள்ள மாணவா்களுக்கு மொத்தம் 119 மையங்களில் செய்முறைத் தோ்வு நடைபெற்றது. 

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியது:

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் செய்முறைத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. பியூரிட், மைக்ரோஸ்கோப், ஸ்டெக்ரோமிட் உள்ளிட்ட சில கருவிகளை செய்முறைத் தோ்வின்போது பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவா்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் மாணவா்கள் தங்களது மருத்துவச் சான்றிதழ்களுடன் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் முறையிட்டால் மற்றொரு நாளில் தோ்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com